கோலி படையை வெளுத்துவாங்க களமிறக்கப்பட்ட ஹிட்டர் மன்னர்.! முதல் ஆட்டத்திலேயே அசத்தல்.!

கோலி படையை வெளுத்துவாங்க களமிறக்கப்பட்ட ஹிட்டர் மன்னர்.! முதல் ஆட்டத்திலேயே அசத்தல்.!


chris-gayle-played-very-well

13-வது ஐ.பி.எல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் அணி நேற்றய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. இந்த சீசனில் ஒரு போட்டிகளில் கூட களமிறங்காத பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் நேற்றய போட்டியில் களமிறங்கினார்.

chris gayle

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெயில் நேற்றய போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தநிலையில், இரண்டாவது வரிசையில் களமிறக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் முதல்முறையாக களம் கண்ட கெய்ல் ஓரிரு ஓவர்களை சமாளித்த பிறகு தனது கைவரிசையை காட்டினார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய கெய்ல் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.