விளையாட்டு

ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த கிறிஸ் கெய்ல்! இனி அவர் தான் நம்பர் ஒன்

Summary:

Chris Gayle new records in odi

நேற்று நடைபெற்ற இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் 300 ஒருநாள் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைகளை கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார். 

நேற்றைய போட்டி கிறிஸ் கெய்லிற்கு 300 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதற்கு முன்னதாக பிரைன் லாரா ஆடியிருந்த 299 ஆட்டங்களே வெஸ்ட் இண்டீஸிற்கு அதிகபட்சமாக இருந்தது. 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார் கெய்ல். 

மேலும் அதே ஆட்டத்தில் லாராவின் மற்றொரு சாதனையையும் முறியடித்தார் கெய்ல். நேற்றைய ஆட்டத்தில் 7 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்தார். இதற்கு முன்னதாக 10348 ரன்கள் எடுத்த பிரைன் லாரா முதல் இடத்தில் இருந்தார். 

இதுவரை 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல் 10353 ரன்கள், 25 சதம், அதிகபட்ச ரன் 215, 325 சிக்சர்கள், 123 கேட்ச்சுகள் என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இடத்தில் உள்ளார். 


Advertisement