விளையாட்டு

கிறிஸ் கெயிலின் மரணமாஸ் வெறியாட்டம்.! தட்டி தூக்கிய ஆர்ச்சர்.! கடுப்பில் பேட்டை தூக்கி வீசிய கெயில்.!

Summary:

கிறிஸ் கெயில் 63 பந்துகளுக்கு 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆனார். சதத்தை தவறவிட்ட கெயில் கடுப்பில் பேட்டை தூக்கி வீசினார்.

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடக்கும் 50வது ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். மந்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆகினார்.  இதனையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து அற்புதமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.

சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பூரான் 10 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இவனையடுத்து மேக்ஸ்வல் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய கிறிஸ் கெயில் இறுதி வரை  சிறப்பாக ஆடி 63 பந்துகளுக்கு 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆனார். சதத்தை தவறவிட்ட கெயில் கடுப்பில் பேட்டை தூக்கி வீசினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது.


Advertisement