பாடகி சின்மயின் பாலியல் புகாரில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா!. அதிர்ச்சி தகவல்!.

பாடகி சின்மயின் பாலியல் புகாரில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா!. அதிர்ச்சி தகவல்!.


chinmayi complaint about malinga


பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். இந்த பிரச்னை நாடு முழுவது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

மேலும் பாலியல் தொல்லைகளில் சிக்கிய பலர் பாடகி சின்மயிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர். இதனை சின்மயி அவரது #MeToo என்ற ஹாஸ்டேக் மூலம் டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டு வந்தார். இதன் மூலம் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  

சின்மயியின் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு பல தரப்பினர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அதே சமயத்தில் அவருக்கு எதிராகவும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் சின்மயியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தும் வருகின்றனர்.

chinmayi and vairamuthu

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது, பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சின்மயின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண் ஒருவர் எழுதி அனுப்பிய பதிவை, சின்மயி பகிர்ந்துள்ளார் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

அந்த பதிவில் அந்த பெண் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்பு மும்பை சென்றிருந்த போது, எனது சினேகிதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர், எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார்.

 நான் உள்ளே சென்று பார்த்தபோது, இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா என்னை அவரது படுக்கையில் தள்ளி, தவறாக நடந்துகொள்ள முயன்றார். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து நான் தப்பிச்சென்றேன் என குறிப்பிட்டுள்ளார்.