விளையாட்டு Ipl 2019

சூடு பிடிக்கும் IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சிக்கே நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்

Summary:

Chepakam with csk fans for coaching

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கியதால், முதல் மதியம் முதலே கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கத்தை முற்றுகையிட தொடங்கிவிட்டனர். குறைந்தபட்ச டிக்கெட் விலையாக 1300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது மைதானத்திற்கு ரசிகர்கள் இருப்பது குறைவு தான். ஆனால் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை பார்க்கவே ரசிகர்கள் கூடி மைதானமே கலைகட்டியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரசிகர்களுக்கு மிகவும் வசதியாய் அமைந்துவிட்டது. 


Advertisement