இன்றைய போட்டியில் சென்னை அணிக்கு இப்படி ஒரு சிக்கலா? வாழ்வா சாவா போட்டியில் என்ன செய்யப்போகிறது சிஎஸ்கே?

சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இன்றைய போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.


chennai-vs-delhi-ipl-match-updates

சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இன்றைய போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் விளையாடுகின்றன. முதல் சுற்றில் மோசமான தோல்விகளை சந்தித்த சென்னை அணி தற்போதுதான் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. ஆனால் அதற்குளாக சென்னை அணிக்கு இன்று மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை அணி துபாய் மைதானத்தை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளது. சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு துபாய் மைதானத்தில் சென்னை அணிக்கு சாதகமாக உள்ளது. இதனால் சென்னை அணி கடந்த போட்டியில் குறைவான டார்கெட்டிலும் வெற்றிபெற்றது.

csk

ஆனால் இன்று டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியானது சார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. சார்ஜா மைதானம் பரப்பளவில் மிக சிறியது. எனவே இந்த மைதானத்தில் மிக எளிதாக 200+ ரன்களை கடக்க முடியும். அதிலும் இந்த மைதானத்தில் டெல்லி அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளது.

csk

ஏற்கனவே பேட்டிங்கில் செம பார்மில் இருக்கும் டெல்லி அணி வீரர்கள் இந்த மைதானம் மிக சிறியது என்பதால் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள். ஆனால் இதற்கு முன் ஒரே ஒரு போட்டியில்தான் சார்ஜாவில் சிஎஸ்கே விளையாடியுள்ளது. அதிலும் ராஜஸ்தான் அணியுடன் தோல்வியை சந்தித்தது.

டெல்லி மற்றும் சென்னை அணியை ஒப்பிட்டால், டெல்லி அணியில் இருக்கும் அளவிற்கு சென்னை அணியில் ஹிட்டர்கள் இல்லை. அதேநேரம் சென்னை அணியின் சுழற்பந்தும் இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு சாதமாக அமைவது மிகவும் கடினம். இதனால் இன்றிய போட்டியில் டெல்லி அணி 200 க்கும் அதிகமாக ரன்கள் அடித்தாலோ அல்லது சென்னை அணி முதல் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு குறைவாக எடுத்தலோ அது சென்னை அணிக்கு மிகவும் சிக்கலாக மாறும் என்கிறார்கள் நிபுணர்கள்.

தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கும் சென்னை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதனால் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடுகிறது சென்னை அணி.