கடைசி நேரத்தில் சென்னைக்கு டஃப் கொடுத்த பேட் கம்மின்ஸ்.! பதறிப்போன சென்னை ரசிகர்கள்.! திக்.. திக் திகில் வெற்றி.!

கடைசி நேரத்தில் சென்னைக்கு டஃப் கொடுத்த பேட் கம்மின்ஸ்.! பதறிப்போன சென்னை ரசிகர்கள்.! திக்.. திக் திகில் வெற்றி.!


Chennai Super Kings won by 18 runs

ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய டு பிளிஸ்சிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் நின்றார். இறுதியாக சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

csk

இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸல் 22 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் ஆட்டத்தையே தலைக்கீழாக மாற்றினார். 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.