மற்ற அணிகளை விட சிஎஸ்கேவுக்கு நம்பிக்கை அதிகம்... வாட்சன், டூபிளசிஸ் அதிரடி பேட்டி.!

மற்ற அணிகளை விட சிஎஸ்கேவுக்கு நம்பிக்கை அதிகம்... வாட்சன், டூபிளசிஸ் அதிரடி பேட்டி.!


chennai-super-kings-team-always-differ-from-other-teams

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்று வரும் 13 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து நடைப்பெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

இதனால் அணியின் வீரர்களை மற்ற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. ஆனால் கடைசியாக நடைப்பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

dhoni

நேற்று முன்தினம் நடைப்பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிகழ்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சன், டூபிளசிஸ் இவ்வாறு கூறியுள்ளனர்.

அதாவது பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் இருவரும் வீரர்களின் திறமை, தரம் மீது நம்பிக்கை வைப்பவர்கள். நம்பிக்கை வைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் என்பது அவர்களுக்கு தெரியும். அதேபோல் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணி வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்து வருகின்றனர் என நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளனர்.