ப்பா...! பயிற்சியே வெறித்தனமா இருக்கே..!! அப்போ கப்பு நமக்குத்தானா!! பயிற்சியில் சிஎஸ்கே.. வைரல் வீடியோ..

ப்பா...! பயிற்சியே வெறித்தனமா இருக்கே..!! அப்போ கப்பு நமக்குத்தானா!! பயிற்சியில் சிஎஸ்கே.. வைரல் வீடியோ..


Chennai super kings match practice video

சென்னை வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை அணி நிர்வாகம்.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகளும், இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி முதல் சுற்றிலையே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் கடந்த ஆண்டு சென்னையின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில், சென்னை அணி தங்கள் தவறுகளை சரிசெய்து, கட்டாயம் ஐபில் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புடன் சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ipl t20

அதேநேரம், சென்னை அணி வீரர்களும் தங்கள் பங்கிற்கு கடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை அணியில் இருந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அணியின் கேப்டன் தோனியுடன் இணைந்து ரெய்னா மற்றும் சக வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை அணி வீரர்களின் வெறித்தனமான பயிற்சியை பார்க்கும்போது, இந்தமுறை ஐபில் கோப்பை நமக்குத்தான் போல என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் சென்னை அணி ரசிகர்கள்..