விளையாட்டு

பெங்களுரூ அணியை தவிர்த்து வேறு எந்த அணிக்கு விளையாட ஆசை.? சிஎஸ்கே-வா? மும்பையா.? கொஞ்சம் கூட யோசிக்காமல் சஹால் அளித்த பதில்.!

Summary:

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எ

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால், ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் வீட்டிலே பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுபவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான யுவேந்திர சஹாலிடம், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, அவரிடம் நீங்கள் பெங்களுரூ அணியை தவிர்த்து வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்கு சஹால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சென்னை அணி தான் என்று பதிலளித்தார் யுவேந்திர சஹால். 2011-ஆம் ஆண்டு யுவேந்திர சஹால் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டார். பின்னர் 2014-ஆம் ஆண்டு பெங்களூரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், தற்போது வரை பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement