லெஜண்ட் சரவணா அருளின் ஸ்டெயிலை மிஞ்சிய யுஸ்வேந்திர சாஹல்.! துள்ளி குதித்த அவரது மனைவி.! வைரல் வீடியோ

லெஜண்ட் சரவணா அருளின் ஸ்டெயிலை மிஞ்சிய யுஸ்வேந்திர சாஹல்.! துள்ளி குதித்த அவரது மனைவி.! வைரல் வீடியோ



chahal got 5 wicket in yesterday match

ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.  

இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய யுஸ்வேந்திர சாஹல் தான். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களுக்கு 40 ரன்கள் மட்டுமே தேவை என்ற வலிமையான நிலையில் இருக்கும்போது 17வது ஓவரை வீசிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர், யுஸ்வேந்திர சாஹல் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை வீழ்த்தினார்.

இதனையடுத்து 85 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையும் அந்த ஓவரின் நான்காவது பந்தில் தட்டித்தூக்க, கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு சிறிது சிறிதாக பறிப்போனது. இதனையடுத்து பாட் கம்மின்ஸ் மற்றும் சிவம் மாவி களத்தில் நிற்க அவர்களையும் ஓவரின் 5வது மற்றும் 6வது பந்தில் வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில் சாஹல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டியதை பார்த்து மைதானத்தில் இருந்த அவரது மனைவி துள்ளிக்குதித்து கொண்டாடியதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.