தனி ஒரு வீரரை கொண்டாடுவதற்கு கம்பீர் காட்டம்!!

தனி ஒரு வீரரை கொண்டாடுவதற்கு கம்பீர் காட்டம்!!


Celebrating a individual person is unfair

னி ஒரு வீரரை மட்டுமே கொண்டாடும் பழக்கம் சரி இல்லை என்று கம்பீர் தனது கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இதில் தோனியின் இன்னிங்சை மட்டுமே அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஒரு இன்னிங்ஸ் மட்டும் கோப்பையை வென்றிட முடியாது. இதில் ஒட்டுமொத்த அணி வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இதில் விளையாடிய மற்ற வீரர்களான யுவராஜ், ஜாஹிர், சச்சின், ஹர்பஜன், ரெய்னா போன்றவர்களை கொண்டாட தவறி விட்டோம். அவர்களது பங்களிப்பும் இந்த உலகக் கோப்பை போட்டியில் முக்கியமானதாக இருந்தது. அதை மறந்து விட்டோம்.

சமூக வலைத்தளங்களில் ஒரு அணியை விட, தனிநபர்களை கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி செய்யும்போது முக்கிய பங்களிப்பு அளித்த வீரர்களின் பங்களிப்பை நாம் கவனிப்பதே இல்லை என்று கம்பீர் அவரது கருத்தினை தெரிவித்துள்ளார்.