செம ஜோடி.. வாவ்.. வைரலாகும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் அழகிய திருமண புகைப்படங்கள்..

செம ஜோடி.. வாவ்.. வைரலாகும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் அழகிய திருமண புகைப்படங்கள்..


Bumrah sanjana marriage photos goes viral

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய அணியின் மிகவும் பிரபலமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. தனது அசாத்திய திறமையால் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மிக முக்கிய பங்காற்றியுள்ளார் பும்ரா. இந்நிலையில் இவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பேச்சு எழுந்தது.

bumrah

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தனது நீண்ட நாள் காதலியான கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை நேற்று (15.03.2021) கோவாவில் வைத்து பும்ரா திருமணம் செய்துகொண்டார். பும்ராவின் மனைவி சஞ்சனா ஒரு தமிழ் பெண். அவரது குடும்பம் தமிழகத்தை பூர்விகமாக கொண்டது.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக பணிபுரிந்துவரும் சஞ்சனா கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளநிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

bumrah

bumrah