விளையாட்டு

அச்சு அசல் பும்ராவை போலவே பந்துவீசும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!

Summary:

Boy bowling same action of bumrah

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் பும்ரா. சர்வதேச அளவில் மிகவும் வித்தியாசமான உடல் அசைவில் பந்து வீசும் திறமை கொண்டவர் இவர்.

இவருக்கென்றே தனியொரு ஸ்டைல் உள்ளது. அதுவே பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை கணித்து விளையாட ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது. 

பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் வேகமாகவும் ஓடாமல் சிம்பிளாக ஓடி வந்து துல்லியமாக பந்துவீசும் திறமை கொண்டவர் பும்ரா. இவரது ஸ்டைல் சிறுவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பும்ராவை போலவே ஓடிவந்து ஒரு சிறுவன் பந்து வீசும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பும்ராவும் சிறுவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement