இந்திய வீரரை 6.75 கோடிக்கு வாங்கிய சென்னை அணி! அவரது முதல் பேட்டியிலேயே செம கடுப்பான கொல்கத்தா அணி ரசிகர்கள்!

இந்திய வீரரை 6.75 கோடிக்கு வாங்கிய சென்னை அணி! அவரது முதல் பேட்டியிலேயே செம கடுப்பான கொல்கத்தா அணி ரசிகர்கள்!



biyush-chawla-talk-about-csk-players

ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.மேலும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் இந்த  ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது.

இதில் 146 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 332 வீரா்கள் ஏலம் எடுக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் . மேலும் அவர்களில் 8 அணிகள் 73 வீரா்களை தோ்வு செய்யவேண்டும் என்ற நிலையில் மொத்தமாக 62 வீரர்கள் அணைத்து அணியினராலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.இதில் 29பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவிற்கு துவக்க விலையாக 1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டநிலையில் கடும் போட்டிக்கு பிறகு  6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து பியூஸ் சாவ்லா கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் விட வேறு சிறந்த அணி இருக்க முடியாது, மேலும் தோனியை விட சிறந்த கேப்டன் வேறு யாரும் இருக்கவே முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சிறந்த அணி, சிறந்த தலைவனுக்கு கீழ் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது எனக்கு தற்போது நிறைவேறியுள்ளது. வேறு எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் அவர் ஏற்கனவே இருந்த கொல்கத்தா அணி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.