"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
#Breaking: ஓவரில் 30 ரன்கள்.. 6-6-6-2-4-6 கணக்கில் விளாசித்தள்ளிய ராஸ் டெய்லர்.. அசத்தல் சம்பவம்.!
சர்வதேச அளவிலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்த பின்னர், அவர்களுக்கென Legends League Cricket என்ற LLCT20 போட்டித்தொடர் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா கேபிட்டல்ஸ் அணிக்கும் - பில்வாரா கிங்ஸ் அணிக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா கேபிட்டல்ஸ் அணியின் சார்பில் விளையாடிய முன்னாள் நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், எதிரணி சார்பில் வீசிய யூசுப் பதானின் பந்துகளை சரமாரியாக விளாசித்தள்ளினார்.
யூசுப் பதானை 8வது ஓவரில் எதிர்கொண்ட ராஸ் டெய்லர் 6 பந்துகள் ரன்கள் முறையே 6, 6, 6, 2, 4, 6 கணக்கில் மொத்தமாக 30 ரன்கள் குவித்தார். இதனால் 8 வது ஓவர் வரை திணறிக்கொண்டு இருந்த இந்தியன் கேபிட்டல்ஸ் அணி, 44 ரன்களை குவித்து வலுவை கண்டது.