விளையாட்டு

உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! வருத்தத்தில் ரசிகர்கள்

Summary:

Ben stokes father diagnosed brain cancer

இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல்முதலாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் வென்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இறுதிப்போட்டியில் கடைசி வரை இங்கிலாந்து அணிக்காக போராடியவர் பென் ஸ்டோக்ஸ்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக பல்வேறு சமயங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார்.

சமீபத்தில் பாக்கிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே ஸ்டோக்ஸ் விளையாடினார். இதற்கு காரணம் அவரது தந்தை ஃபெட் மூளை புற்றுநோயால் அவதிப்படுவது தான்.

தனது தாய்நாடான நியூசிலாந்தில் தந்தை உயிருக்கு போராடும் சமயத்தில் தன்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு செல்ல இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு அனுமதி அளித்தது. தற்போது ஸ்டோக்ஸ் தந்தையுடன் நியூசிலாந்தில் உள்ளார்.


Advertisement