மைதானத்தில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு! அனைத்து வீரர்களுமே தரையில் படுத்த அதிர்ச்சி சம்பவம்

மைதானத்தில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு! அனைத்து வீரர்களுமே தரையில் படுத்த அதிர்ச்சி சம்பவம்


Bees stopped the cricket match

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 35 ஆவது உலகக் கோப்பை போட்டியில் மைதானத்திற்குள் திடீரென தேனீக்கள் வந்ததால் வீரர்கள் தரையில் படுத்தனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ரபடா வீசிய முதல் பந்திலேயே கருணரத்னே விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியா இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.

wc2019

ஆட்டத்தின் 48வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் தேனீக்கள் நுழைந்து விட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள் மற்றும் அம்பயர்கள் தரையில் படுத்து விட்டனர். 

wc2019

சிறிது நேரம் பறந்து கொண்டிருந்த தேனீக்கள் கலைந்து சென்றவுடன் மீண்டும் ஆட்டம் துவங்கியது. அதிர்ஷ்டவசமாக தேனீக்கள் எந்த வீரரையும் தாக்கவில்லை.