விளையாட்டு

இந்தியா - பங்களாதேஷ் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்! திடீர் போராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்

Summary:

Bangladesh cricket players on strike

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே கிரிக்கெட் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்வோம் என அனைத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களும் முடிவு செய்துள்ளனர். அதாவது எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளனர். 

இன்று திடீரனெ பத்திரிக்கையாளர்களை சந்தித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான சாகிப் அல் ஹசன், மகமதுல்லா மற்றும் முஸ்பீர் ரஹீம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதற்கு 19 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தர கிரிக்கெட் வீரர்களும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். 

அதன்பிறகு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய நிறுவன தலைவர் நிசாமுதின் சௌத்ரி, "இந்த விவகாரம் குறித்து தற்போது தான் தெரியவந்தது. தொடர்ந்து இந்த விஷயம் குறித்து போர்டு கூட்டத்தில் அவசரமாக பேசி முடிவுக்கு கொண்டுவரப்படும். இது மிகப்பெரிய கிளர்ச்சியாக இருக்காது என நினைக்கிறேன். அதிகாரப்பூர்வமாகவும் எதுவும் தெரிவிக்கவில்லை. விரைந்து இந்த விவகாரத்துக்கு முடிவு கட்டுவோம்" என கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் அணி கலந்துகொள்ளுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த 11 கோரிக்கைகளை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நிறைவேற்ற தவறினால் நிச்சயம் இந்தியா - பங்களாதேஷ் நடைபெறாது என்பது போல் தான் தோன்றுகிறது. 


Advertisement