மீண்டும் தனது திருவிளையாடலை ஆரம்பித்த வார்னர்!! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் ரவுடி பேபி பாடல்!

மீண்டும் தனது திருவிளையாடலை ஆரம்பித்த வார்னர்!! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் ரவுடி பேபி பாடல்!


Australian cricketer warner viral Instagram post

ரவுடி பேபி பாடலில் தனது முகத்தை இணைத்து வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான வார்னர் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர்.  அதற்கு காரணம், அவர் அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்தியா சினிமா படங்களின் பாடல்கள் அல்லது சீன்களுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிடுவதும், அந்த வீடியோ ட்ரெண்ட் ஆவதும்தான் காரணம்.

warner

புட்ட பொம்மா பாடலுக்கு வார்னர் அடியிருந்த நடனம்  இந்தியளவில் பிரபலமானது. இந்நிலையில் ஐபில் தொடர் தொடங்கியபிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த வார்னர், தற்போது மீண்டும் தனது திருவிளையாடலை ஆரம்பித்துள்ளார்.

இந்த முறை மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலை எடிட் செய்து, அதில் தனுஷ் முகத்திற்கு பதிலாக வார்னரின் முகத்தை வைத்து, அதில் சாய் பல்லவியுடன் நடனம் ஆடுவதுபோல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.