வார்னர் வெறியாட்டம் ஆடியதற்கு இவர்கள் தான் காரணம்.! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரேலிய கேப்டன்.!

வார்னர் வெறியாட்டம் ஆடியதற்கு இவர்கள் தான் காரணம்.! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரேலிய கேப்டன்.!


Australia captain talk about warnar

7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் நேற்று மோதியது. நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று T20 உலக கோப்பையை கைப்பற்றியது.

டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இறுதிப்போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், வார்னரை விமர்சித்தவர்களுக்கு நன்றி.

சில வாரங்களுக்கு முன் வார்னரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என பலர் எழுதியதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த விமர்சனங்கள் தான் வார்னரை இந்த அளவுக்கு தூண்டியது. சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரை போனில் தொடர்பு கொண்டு, வார்னரை பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறினேன்.

அவர் டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வெல்வார் எனவும் கூறினேன். அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழும் போது தான், மிகவும் சிறந்த டேவிட் வார்னர் நமக்கு கிடைப்பார். அவருக்கு இது சிறப்பான தொடராக முடிவடைந்தது என பின்ச் குறிப்பிட்டார்.