இந்திய துவக்க ஆட்டக்காரர்களை கண்டு அஞ்சும் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் பௌலர்!

இந்திய துவக்க ஆட்டக்காரர்களை கண்டு அஞ்சும் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் பௌலர்!


Australia bowler fears for indian openers

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்பர்னில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரின் துவக்க ஆட்டத்திலும் இந்த இரு அணிகள் தான் மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Megan butt

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் மேகன் ஷட் வீசிய முதல் ஓவரிலேயே இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 4 பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் எடுத்தார். மேலும் இதற்கு முன்னர் நடந்த முதத்ரப்பு தொடரில் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான மந்தனா ஷட் பந்தில் இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார்.

இந்திய அணியின் இந்த 2 அதிரடி துவக்க ஆட்டக்காரர்களுக்கு எதிராக என்னால் நேர்த்தியாக பந்துவீச முடியவில்லை என்றும் அதிலும் குறிப்பாக சூப்பர் ஓவரில் அவர்களை சமாளிப்பது மிகவும் சிரமம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் என் பந்தினை மிகவும் எளிதாக அடித்து ஆடுகின்றனர். எனவே சூப்பர் ஓவர்களில் நாங்கள் மாற்று பந்துவீச்சாளர்களை வைத்து அவர்களை சமாளிப்பது குறித்து திட்டமிட்டு வருகின்றோம் என மேகன் ஷட் தெரிவித்துள்ளார்.