டி20 போட்டியில் வெற்றியை தீர்மானிப்பது இது தான்... தமிழக வீரர் அஸ்வின் கருத்து.!

டி20 போட்டியில் வெற்றியை தீர்மானிப்பது இது தான்... தமிழக வீரர் அஸ்வின் கருத்து.!



Aswin talk about T20


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படு மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், டி20 போட்டிகளில் வெற்றி என்பது பவர்பிளே முடிவிலேயே தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது இரு அணிகளுக்கும் மிகச் சிறிய இடைவெளியில் தீர்மானிக்கப்படுகிறது. எந்த அணியும், ஒரே பந்தில் தோல்வியையும் தழுவலாம், ஒரே பந்தில் வெற்றியையும் தழுவலாம், ஆனால் இவை அனைத்தையும் விட பவர்பிளே என்பதே டி 20 கிரிக்கெட்டில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கிறது.

ஒரு அணி பவர் பிளே-வில் 30 ரன்கள் எடுத்திருந்து மற்றொரு அணி பவர்பிளே-யில் 60 ரன்கள் டுத்தால் அங்கேயே ஆட்டம் முடிவடைந்து விடுகிறது. எனவே நமது பலத்தை அறிந்து பவர்பிளே-களை சரியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.