இந்தியா விளையாட்டு

நா இல்ல யார் செய்தாலும் அதா.. சர்ச்சைக்குரிய அவுட்டுக்கு அஸ்வின் என்ன சொல்கிறார் பாருங்கள்.!

Summary:

aswin speech - ipl 4th match - butler out

ஐபில் போட்டியின் 12 வது சீசனில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதியது.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 184 ஓட்டங்கள் பெற்றுது. அதன் பிறகு ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 69 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

ராஜஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டி விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வித்தியாசமான முறையில் பட்லரை அவுட் செய்து வெளியே அனுப்பினார் அஸ்வின். அதாவது, அஸ்வின் பந்து எரிவதற்கு முன்பே நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த பட்லர் கிரீஸை விட்டு வெளியேறினார்.

அஸ்வின் அவுட் செய்த விதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் மேலும் சமூக வலைத்தளங்களில் இது விவாத பொருளாகவும் மாறியது.

பட்லரை சர்ச்சைகுரிய வகையில் அவுட்டாக்கியது தொடர்பாக பேட்டி அளித்த அஸ்வின், “இது இயற்கையாக நடந்தது. எந்த உள்நோக்கமோ, திட்டமிட்டோ நடந்தது இல்லை. 
அதுமட்டுமல்லாமல் இது கிரிக்கெட் விதிமுறைகளுக்குள்ளாக தான் உள்ளது. இப்படி அவுட் செய்ததால் விளையாட்டு உணர்வு இல்லாமல் செய்துவிட்டதாக கூறுவது அர்த்தமற்றது. 

திரும்பத் திரும்ப விளையாட்டு உணர்வு இல்லாமல் அஸ்வின் இப்படி செய்துவிட்டார் என கூறுவது ஏன் என தெரியவில்லை, இது அஸ்வின் மட்டுமல்ல யார் செய்தாலும் கிரிக்கெட் விதிகளுக்குள் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ” என தெரிவித்துள்ளார். 


Advertisement