
Aswin run out budlar in different way
ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதியது.
இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 184 ஓட்டங்கள் பெற்றுது. கடினமான இலக்கோடு ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பத்திலையே ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 12 . 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இது 108 ஓட்டங்கள் பெற்றது. அணியின் தொடக்க வீரர் பட்லர் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 69 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
ராஜஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டி விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வித்தியாசமான முறையில் பட்லரை அவுட் செய்து வெளியே அனுப்பினார் அஸ்வின். அதாவது, அஸ்வின் பந்து எரிவதற்கு முன்பே நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த பட்லர் கிரீஸை விட்டு வெளியேறினார்.
பவுலர் பந்து ஏறிய கையை சுழற்றுவதற்கு முன்பு நான் ஸ்ட்ரைக்கர் கிரீஸை விட்டு வெளியேறினால் அது கிரிக்கெட் விதிமுறை படி விக்கெட். இந்த தந்திரத்தை பயன்படுத்தி அஸ்வின் பட்லரை அவுட் செய்தார். அஸ்வின் அவுட் செய்த விதம் தந்திரமாக இருந்தவும் இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement