இந்த இரண்டு வீரர்கள் தான் டி20-யில் உலகின் சிறந்த வீரர்கள்! ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் புகழாரம்!astrelia former player talk about best players

டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர்தான் என டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் டிவிட்டர் வாயிலாக பல கேள்விகளை கேட்டனர். அதில், 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்டுள்ளனர்.

rohit

இதற்க்கு பதிலளித்த டாம் மூடி இது கடினமான கேள்வி. ஆனால் டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன் என கூறியுள்ளார்.

 தொடர்ந்து ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த டாம் மூடி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோஹ்லி, பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் பதிவிட்டார்.