அடேய்.. கேமராமேன்.! மைதானத்தில் அஸ்வின் செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

அடேய்.. கேமராமேன்.! மைதானத்தில் அஸ்வின் செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!



ashwin teased by netizans for trying to find his sweater

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து மற்றும்  இங்கிலாந்து அணிகள், குரூப் 2-ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இதற்கு முன் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்பே அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது இந்திய அணியின் கேப்டனான  ரோஹித் சர்மா டாஸ் போடும்போது பேசிக்கொண்டு இருக்கையில். அவருக்கு  பின்னால் அஸ்வினின் வேடிக்கையான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், மைதானத்தில் 2 ஸ்வெட்டர் இருந்த நிலையில் அதில் எது தனக்குடையது என தெரியாததால் அஸ்வின் அந்த இரண்டு ஸ்வெட்டரையும்  எடுத்து அதை மோர்ந்து பார்த்து கண்டுபிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் அதனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டரில்,"முதலில் இரண்டுக்கும் இடையே சைஸ் வைத்து சோதனை செய்து பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பின் முதல் எழுத்து எழுதப்பட்டுள்ளது வைத்து சோதித்து பார்த்தேன் அப்பொழுதும்  கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால்தான் கடைசியாக பெர்பிஃயூம் வாசனையை வைத்து என்னுடையதை கண்டுபிடித்தேன். அடேய் கேமராமேன் என சிரித்தவாறே பதிலளித்துள்ளார்.