சொல்லி அடிக்கும் சச்சின் மகன்..! அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரை க்ளீன் போல்ட் செய்த அர்ஜுன் டெண்டுல்கர்.! வைரல் வீடியோ

சொல்லி அடிக்கும் சச்சின் மகன்..! அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரை க்ளீன் போல்ட் செய்த அர்ஜுன் டெண்டுல்கர்.! வைரல் வீடியோ


arjun-tendulkar-clean-bold-ishan-kishan

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில், அதிக போட்டிகளில் வெற்றிபெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பலரும் எதிர் பார்த்த மும்பை அணி இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியால் ரூ 30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையில், இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அர்ஜுனுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என சச்சின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்தநிலையில், வலைபயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் தனது  யார்க்கர் பந்தில் ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷனை க்ளீன் போல்ட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.