மைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர்! ஏன் தெரியுமா? அவரே கூறிய விளக்கம்! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

மைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர்! ஏன் தெரியுமா? அவரே கூறிய விளக்கம்!


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். 

லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. அந்த போட்டியில் ஆட்டத்தின் 77 ஆவது ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 80 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்மித். அப்போது ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். 

களத்தில் இருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருத்துவர்கள் உள்ளே வந்து ஸ்மித்தை பரிசோதித்தனர். அவர் நிதானமாக இருப்பதை உணர்ந்தனர். இருப்பினும் அவரை மருத்துவர்கள் வெளியில் அழைத்து சென்றனர். பின்னர் சிடில் அவுட் ஆனபிறகு மீண்டும் களத்திற்கு வந்த ஸ்மித், அதன்பின்னர் பெரிதாக ஆடவில்லை. 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்துவிட்டார்.

இதில் ஸ்மித் வலியால் மைதானத்தில் துடித்துக் கொண்டிருந்த போது, ஆர்ச்சர், பட்லரிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், ஆர்ச்சரை அனைவரும் திட்டினர். இதையடுத்து இது குறித்து ஆர்ச்சர் கூறுகையில், ஸ்மித் கீழே விழுந்ததை கண்டு எங்கள் இதயமே நொறுங்கியது. அவர் திரும்ப எழுந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல வேண்டும் என்று யாருமே நினைக்கமாட்டார்கள், நாங்கள் அப்போது பேசி சிரித்தது வேறு என்று ஆர்ச்சர் உருக்கமாக கூறியுள்ளார்.


Advertisement
TamilSpark Logo