
ambathi raidu reentry in cricket
உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் மிகுந்த விரக்தியில் இருந்த அம்பத்தி ராயுடு தேர்வு குழுவினரையே கலாய்க்கும் அளவிற்கு ட்வீட் செய்தார். இதனால் என்னவோ தவான், விஜய் சங்கர் காயத்திற்கு பிறகும் அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பை தொடரின் போதே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார். 34 வயதான ராயும் மீண்டும் தான் ஹைதராபாத் அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில் தான் அப்போது இருந்த மன நிலையில் அப்படி ஒரு முடிவினை எடுத்துவிட்டேன். ஆனால் சீனியர் வீரர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் விவிஎஸ் லட்சுமணன், நியோல் டேவிட், CSK ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தான் விளையாட தயார் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
Advertisement
Advertisement