அவரா.!! சூப்பர் பிளேயர் ஆச்சே..! உடனே அவரை சென்னை அணியில் எடுங்க..!! கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்..

அவரா.!! சூப்பர் பிளேயர் ஆச்சே..! உடனே அவரை சென்னை அணியில் எடுங்க..!! கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்..


alex-hales-for-csk-may-be-replacement-of-josh-hazelwood

சென்னை அணியில் இருந்து ஜோஷ் ஹேசல்வுட் விலகியுள்ளநிலையில் அவருக்கு பதில் சென்னை அணியில் இணையப்போகும் மாற்று வீரர் யாராக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதம் 9 ஆம் தேதி முதல் ஐபில் T20 சீசன் 14 தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த முறை கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக சென்னை அணி இந்தமுறை கோப்பையை கைப்பற்ற அதிக தீவிரத்துடன் செயல்பட்டுவருகிறது.

IPL 2021

இந்நிலையில் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் இந்த வருட ஐபில் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் எனவும், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதால் அதற்கு தயாராக வேண்டும் எனவும் கூறி ஜோஷ் ஹேசல்வுட் சென்னை அணியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஜோஷ் ஹேசல்வுட்க்கு பதிலாக சென்னை அணி எந்த வீரரை தேர்வு செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இநிலையில் சென்னை அணி ஏற்கனவே ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை ஒப்பந்தம் செய்திருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.

IPL 2021

ஆனால் சென்னை அணி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளநிலையில், தயவு செய்து அலெக்ஸ் ஹேல்ஸை சென்னை அணியில் எடுங்கள் எனவும், பவர்ப்பிலே நேரங்களில் அடித்து ஆடுவதற்கு இப்படி ஒரு வீரர் சென்னை அணிக்கு தேவை எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.