முகத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அணிக்காக போராடிய ஆஸ்திரேலிய வீரர்!

முகத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அணிக்காக போராடிய ஆஸ்திரேலிய வீரர்!


Alex carey continued batting after hurt

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது அனல் பறக்கும் பந்து வீச்சால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது.

முதல் ஏழு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சந்தித்த முதல் பந்திலேயே தனது ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

wc2019

அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஏழாவது ஓவரில் ஹான்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் முதல் ஏழு ஓவர்களிலேயே 14 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

அதன் பின்னர் ஸ்டீபன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. சேப்ரா ஆர்ச்சர் வீசிய எட்டாவது ஓவரின் முதல் அலெக்ஸ் கேரியின் தாழ்வாயில் பலமாக அடித்தது. தலையில் இருந்த ஹெல்மெட் தானாகவே விழுந்தது. அலெக்ஸ் கேரியின் கன்னத்தில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது.

wc2019

பின்னர் உள்ளே வந்த மருத்துவர் காயத்தில் மருந்து வைத்து கன்னத்தில் கட்டு ஒன்றினை போட்டுவிட்டு சென்றார். அந்த வலியிலும் வெளியில் செல்லாமல் அணிக்காக சிறப்பாக ஆடினார் அலெக்ஸ் கேரி. அதன் பின்னர் 20 ஓவர்கள் ஆடிய அலெக்ஸ் கேரி அதில் ரசீது வீசிய 28 ஆவது ஓவரில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.