இந்த ரூல்ஸ்லாம் அப்போ இருந்திருந்தா சச்சின் 1 லட்சம் ரன்களை அசால்ட்டாக அடித்திருப்பார்.! பாகிஸ்தான் வீரர் ஓப்பன் டாக்.!

இந்த ரூல்ஸ்லாம் அப்போ இருந்திருந்தா சச்சின் 1 லட்சம் ரன்களை அசால்ட்டாக அடித்திருப்பார்.! பாகிஸ்தான் வீரர் ஓப்பன் டாக்.!


akthar talk about sachin

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு முன்பாக பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகப்படியாக இருந்தது. டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு முன்பு ஒரு பேட்டர் சதம் அடிப்பது என்பது மிகவும் கடினமாகும். அப்போதெல்லாம் 50 ஓவர்களில் 250 ரன்களை அடிப்பது என்பதே பல அணிகளுக்கும் சவாலாக இருக்கும். ஆனால் டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு 20 ஓவர்களிலே 250 ரன்கள் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

போற போக்கை பார்த்தல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை வைத்திருக்கும் சாதனையை விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் விரைவில் கடந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் ரவி சாஸ்த்ரியுடன் சோயிப் அக்தர் நடத்திய உரையாடலில், இப்போது இருக்கும் ஒரு இன்னிங்சில் 3 டி.ஆர்.எஸ். விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் என்று தெரிவித்தார். பெரும்பாலும் சச்சினுக்கு நடுவர்கள் தவறான முடிவை வழங்கிவிடுவார்கள். இதை மனதில் வைத்தே அக்தர் இப்படி கூறியுள்ளார்.