சச்சினை பற்றி புளுகிதள்ளிய அக்தர்! கடுப்பான சச்சின் ரசிகர்கள்!

சச்சினை பற்றி புளுகிதள்ளிய அக்தர்! கடுப்பான சச்சின் ரசிகர்கள்!



Akthar talk about sachin

சச்சினை 12-13 முறை தான் அவுட் செய்துள்ளேன் என பாக்கிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சொன்ன தவறான தகவலை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், சச்சின் டெண்டுல்கர் உடன் விளையாடிய நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அக்தர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசிய காலம் என்னுடைய நல்ல காலம் என கருதுகிறேன். நான் விளையாடிய காலங்களில் சச்சின் தான் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் நான் அவரை 12-13 முறை அவுட் செய்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.

sachin

ஆனால் உண்மையிலுமே சச்சின் டெண்டுல்கரை 8 முறை தான் வீழ்த்தி உள்ளார் சோயப் அக்தர். ஒருநாள் போட்டிகளில் ஐந்து முறையும், டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் அக்தர்.அதேபோல் ஐபிஎல் தொடரில் ஒரு முறை வீழ்த்தி உள்ளார்.

இந்தநிலையில் சோயப் அக்தரின் தவறான கருத்தால் சச்சின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.  அக்தர்  வெளியிட்ட பதிவிற்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.