இந்தியா விளையாட்டு

இந்திய அணியில் இவர்தான் எனக்கு போட்டியில் எதிரி! ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர்!

Summary:

akthar talk about his enemy in game

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள்,  கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 

அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பிரபல ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த போட்டியில் விராட் கோலி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், விராட் கோலியும், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இருவரும் பஞ்சாபி என அக்தர் கூறியுள்ளார்.  

மேலும், நாங்கள் களத்திற்கு வெளியில் சந்தித்தால் சிறந்த நண்பர்களாக இருப்போம். அதே வேளையில் இருவரும் போட்டியில் சந்தித்தால் அவருக்கு மிகச்சிறந்த எதிரியாக இருந்திருப்பேன். விராட் எனக்கு மிகவும் இளையவர் என்றாலும், நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என கூறினார்.

விராட் கோலியும், அக்தரும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். ஆனாலும் அக்தர் விராட் கோலிக்கு பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement