நான்கு வருடங்களுக்கு பிறகு மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்!

நான்கு வருடங்களுக்கு பிறகு மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்!


After four years Mumbai Indians has vetrri

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.

தொடர்ந்து நான்கு வருடங்கள் 8 போட்டிகளிலும் மும்பை அணி ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

ipl

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சம பலத்தில் இருந்தது. முன்னதாக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். மைதானத்தின் நான்கு புறமும் சுற்றி சுற்றி விளாசிய அவருக்கு ஐபிஎல் தொடரில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர்.

மேலும் பந்துவீச்சில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, போல்ட் மற்றும் பேட்டின்சன் எதிரணியினரை வேகத்தால் மிரட்டினர். அதிகபட்சமாக பும்ரா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட் மற்றும் பேட்டின்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.