உலகக்கோப்பை: ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்! பாகிஸ்தான் திணறல் - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

உலகக்கோப்பை: ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்! பாகிஸ்தான் திணறல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 112 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி (46/3), ரஷித் கான் (27/2) என பாதிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரட்டினர். 

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் சாகிடி சிறப்பாக ஆடி 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற செய்தார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் அனைத்து அணிகளையும் மிரட்டிய ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையிலும் அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo