இந்தியா விளையாட்டு WC2019

நேற்றைய ஆட்டத்தில் சச்சினின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆப்கனிஸ்தான் இளம் வீரர்!

Summary:

afganisthan young player beat sachin record

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதுவரை ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நான்காவது இடத்தை பிடிப்பது நியூசிலாந்து அணியா பாகிஸ்தான் அணியா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்டிண்டிஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில், முதலில் பேட் செய்த வெஸ்டிண்டிஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. 

தொடர்புடைய படம்

நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் இக்ராம் 86 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் 18 அல்லது அதற்கு குறைந்த வயதில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளினார் இக்ராம். 

உலகக்கோப்பை அரங்கில் அதிகரன்கள் எடுத்த இளம் வயது வீரர்கள்: 
18 வயது 278 நாட்கள் இக்ராம் 86 வருடம் -2019 
18 வயது 323 நாட்கள் சச்சின் 84 வருடம் -1992 
18 வயது 318 நாட்கள் சச்சின் 81 வருடம் -1992 


Advertisement