இந்தியா விளையாட்டு

ஒருவழியாக ரெய்னாவின் பிரச்சனை முடிவிற்கு வந்தது.. உருட்டுகட்டைகளுடன் கொள்ளையர்கள் கைது!

கடந்த மாதம் பஞ்சாபில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா மற்றும் மாமாவின் மகன் உயிரிழந்தனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகி இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு நீண்ட நாட்களாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறினர்.

இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் போலீசாருக்கு நம்ப தகுந்த துப்பு ஒன்று கிடைத்தது. அதன் பேரில் பதன்கோட் ரயில்நிலையம் அருகே உள்ள சேரிப்பகுதியில் போலீசார் நோட்டமிட்டனர்.

இதன் பலனாக அந்த பகுதியில் பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என உறுதியானது. அவர்களிடம் இருந்து தங்க மோதிரங்கள் மற்றும் உருட்டு கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement