அதிர்ச்சியளிக்கும் ஆஸ்திரேலியா! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் 7 வயது சிறுவன்



7 year old spinner in australian test squad

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவிருக்கும் 3 வது டெஸ்ட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. இது ஒரு வழக்கமான செய்தி என்றாலும் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அந்த அணியில் இடம் பெற்றுள்ளன ஏழு வயது சிறுவன் இவரது பெயர் ப்ராவே ஆர்ச்சி. இவர் ஒரு லெக் ஸ்பின்னர் ஆவார். இவர் அணியில் இடம் பிடிப்பதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் நேற்று உறுதி செய்துள்ளார்.

ind vs aus

பிக் பாக்ஸிங் தினத்தன்று நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சி இடம்பிடித்திருப்பதை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர் அவரை தொடர்புகொண்டு தெரியப்படுத்தினார். அப்போது லாங்கரிடம் பேசிய ஆர்ச்சி, விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆக வேண்டும் என்பது அவரின் கனவாகும்.

கடந்த அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் அணியில் ஆர்ச்சி இடம்பிடித்திருந்தார். மேலும் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் ஆஸ்திரேலியா வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் ஆர்ச்சி. 7 வயதே ஆனா ஆர்ச்சி பிறந்த 3 மாதங்களிலிருந்து இதுவரை மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.