இந்தியா விளையாட்டு

ஐ.பி.எல் 2021 சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படும் 6 வீரர்கள்.! அதில் ஒருவர் இல்லாததால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

சென்னை அணியில் நீக்கியவர்களின் பட்டியலில் ரெய்னாவின் பெயர் இல்லாததால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 11ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடக்க உள்ளது. இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை அந்தணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணியில் இருந்து கழற்றிவிடப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு நேற்றே கடைசி நாள் என்பதால், அந்தந்த அணியை சேர்ந்த நிர்வாகம், தங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.


அந்த வகையில் சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முரளிவிஜய், ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங், கேதார் ஜாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் சின்ன தல என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் பெயர் இல்லாததால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement