வெளியானது 2020 T20 உலகக் கோப்பைக்கான அட்டவணை; இந்திய அணியின் போட்டிகள் விபரம்.!

வெளியானது 2020 T20 உலகக் கோப்பைக்கான அட்டவணை; இந்திய அணியின் போட்டிகள் விபரம்.!


2020---t20-international-match-calender

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள 7-வது டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. டிசம்பர் 31 வரை உள்ள ஐசிசி தரவரிசை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இலங்கையும், 10-வது இடத்தில் உள்ள பங்களாதேஷும் ஆரம்ப நிலையில் இருக்கும் 6 அணிகளோடு தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும். இதில் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். தகுதிச்சுற்று போட்டிகள் இந்த வருடம் [2019] நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி துவங்கி, நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

2020 T20

குரூப்-A:
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் A1, B2 அணிகள்

குரூப்-B:
இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் B1, A2 அணிகள்

முதல் போட்டி சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் குறித்த விவரம்: 

2020 T20