உலகக்கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல்: எந்த அணி எந்த இடம்? முழு விவரம் இதோ!



2019 world cup cricket ranking


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25 வது லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகள் வெற்றி பெற்று 
9 புள்ளிகளை பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகள் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 8 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், அதேபோல் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகள் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 8 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

worldcup 2019
இந்திய அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று மழையின்காரணமாக ஒரு போட்டி ட்ராவில் முடிந்து 7 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.  வங்கதேசம் அணி இதுவரை விளையாடிய  5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகள் வெற்றி பெற்று  5 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இந்தநிலையில் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இன்று விளையாட உள்ளன.