விளையாட்டு

பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமான அந்த ஆறு பந்துகள்! சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

19th over is the reason for Bangalore lost the match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நேரத்தில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பையின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, டீ வில்லியர்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 75 ரன் எடுத்தார். மெயின் அலி 50 ரன் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

172 என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினாலும் இடையில் வரிசையாக விக்கெட் போக ஆரம்பித்தது. இறுதியில் பெங்களூர் வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் ஹர்டிக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஒரு ஓவர் மீதம் இருக்கும் நிலையிலையே மும்பை அணி வெற்றி பெற்றது.

19 வது ஓவரில் நெகி வீசிய பந்தை பறக்கவிட்டார் பாண்டியா. ஒரே ஓவரில் 22 ரன் கொடுத்தது பெங்களூர் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.


Advertisement