அனல் பறக்கும் அண்ணாமலையின் அறிவிப்பு! முதல் மாநில மாநாடு.... போதை இல்லா பொள்ளாச்சி! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிய 'We the Leaders' அமைப்பின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முன்னிட்டு, மாநாட்டு தளத்தில் இன்று பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
பொள்ளாச்சியில் தொடங்கிய மாநாட்டு பணிகள்
பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைந்துள்ள மாநாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டப் பொறுப்பாளர் வசந்த ராஜன் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், மங்கள இசையுடன் பந்தல்கால் நடப்பட்டு மாநாட்டிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு 'We the Leaders' அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ஆதரவு! அண்ணாமலைக்காக பாஜகவை கூண்டோடு காலி செய்த 300 நிர்வாகிகள்..... அதிர்ச்சியில் நயினார் நாகேந்திரன்!!!
ஜூலை 12-ல் மாநில மாநாடு
அண்ணாமலையின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநில மாநாடு வரும் ஜூலை 12-ஆம் தேதி மாலை 4 மணியளவில் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக பங்கேற்பார்கள் என அமைப்பின் நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மையக்கருத்து
இந்த மாநாட்டின் மையக்கருத்தாக 'போதை இல்லா பொள்ளாச்சி' என்ற விழிப்புணர்வு வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 'We the Leaders' அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் மாநாட்டில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஜூலை 1 முதல் தொடங்குகிறேன்.... அதிரடியாக அறிவித்த அண்ணாமலை! அதிரும் தமிழக அரசியல் களம்!!!