திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவி திடீரென பறிபோனது! என்ன காரணம்?

திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவி திடீரென பறிபோனது! என்ன காரணம்?


vp-duraisamy-removal-from-dmk-deputy-secretary-post


திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமியை அதிரடியாக நீக்கி உத்தரவை பிறப்பித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை பாஜக அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று என வி.பி. துரைசாமி தரப்பில் கூறப்பட்டாலும், திமுகவினரிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

dmk

இப்படிப்பட்ட சூழ்நிலையில் , துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைப்பொது செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பியை நியமித்திருக்கிறது திமுக .

இதுகுறித்து வி.பி. துரைசாமி கூறுகையில், பதவி பறிப்பு ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.