BREAKING: திடீர் திருப்பம்! தவெக கூட்டணியில் இணையும் பெரிய கட்சி.... இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் அதிகாரபூர்வ் அறிவிப்பு!! உற்றுநோக்கும் அரசியல் கலம்!!!



vijay-tvk-pmk-alliance-ramadoss-decision

தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் கவனம் ஈர்த்திருப்பது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாமக இடையே உருவாகும் என கூறப்படும் புதிய அரசியல் கூட்டணியே ஆகும். சமீப காலமாக நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களுக்கிடையில், இந்த கூட்டணி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

தவெக – பாமக கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக), டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸும், திமுக கூட்டணியில் திருமாவளவனும் இணைந்ததால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, ராமதாஸ் இதுவரை தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்காமல் இருந்தார்.

தைலாபுரத்தில் நடந்த ஆலோசனை

இந்த நிலையில் தைலாபுரத்தில் ஜி.கே. மணி, அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: உருவாகும் மெகா கூட்டணி! விஜய்யுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை! அதிர்ச்சியில் அல்லல்ப்படும் திமுக, அதிமுக!

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாமக எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய அரசியல் மாற்றங்களை நோக்கி பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாமக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சியின் ஆதரவு கிடைத்தால், அது தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: எட்டப்போகும் இறுதி முடிவு! தவெக வுடன் ராமதாஸ் கூட்டணி.... புதிய மெகா கூட்டணியால் அள்ளுவிடப்போகும் அரசியல் கட்சிகள்!