விஜய்யின் திக் திக் நிமிடங்கள்.! அக்னிப்பரீட்சை ஆரம்பமா.... உள்ளே செல்லப்போகும் 232 எம்.எல்.ஏ-க்கள்! விஜய்யின் முதல்வர் பதவி நீடிக்குமா? காரசாரமாக தமிழக சட்டமன்றத்தில் இன்று நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.!!!
தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகக் கருதப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெறுகிறது. 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, மே 13-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் சட்டசபை கூடுகிறது.
நம்பிக்கை தீர்மானம் இன்று முன்மொழிவு
அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று அவையில் முன்மொழிய உள்ளார். இதையடுத்து வாக்கெடுப்பு நடைமுறைகள் தொடங்கப்படவுள்ளன.
அவையின் கதவுகள் மூடப்பட்டு, உறுப்பினர்கள் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வாக்களிப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள 232 உறுப்பினர்களில், பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
119 உறுப்பினர்கள் ஆதரவு என கணக்கு
தவெகவுக்கு தனியாக 106 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதால், மொத்தம் 119 பேரின் ஆதரவு உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு சிக்கலின்றி நிறைவேறும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், அதிமுகவின் சி.வி. சண்முகம் தலைமையிலான குழு விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவையில் காரசார விவாதம் எதிர்பார்ப்பு
இந்த சூழலில், இன்று நடைபெறும் அவை கூட்டத்தில் கடும் விவாதங்கள் எழ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதையொட்டி, சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படும் இந்த வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. தற்போதைய கணக்குகள் அனைத்தும் சாதகமாக இருப்பதால், வாக்கெடுப்புக்குப் பிறகு முதல்வர் விஜய் தனது அரசின் பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து மூன்று முக்கிய எம்.எல்.ஏ.க்கள் விலகல்..? 35 எம்எல்ஏக்களுடன் முக்கிய கட்சியில் இணைவு...செம ஷாக்கில் எடப்பாடி!!!