" சொன்னது ஒன்று... செய்தது ஒன்று " முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு பேரடி! குமுறும் தமிழக மக்கள்.!!!



vijay-first-govt-order-free-electricity-controversy

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட முதல் அரசாணை தற்போது அரசியல் சர்ச்சையின் மையமாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட இலவச மின்சார வாக்குறுதி மற்றும் தற்போது வெளியான அரசாணை இடையே முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தேர்தல் வாக்குறுதியில் “மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்” வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் “இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் வெடித்துள்ளது. இதனால், நடைமுறையில் ஒரு மாதத்திற்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

இந்த விவகாரத்தை முன்வைத்து திமுகவினர் மற்றும் பல நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “சொன்னது ஒன்று, செய்தது ஒன்று” என்ற வாசகத்துடன் பல பதிவுகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, விஜயின் முதல் கையெழுத்தே சர்ச்சையில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: BREAKING: வெடித்தது புதிய சர்ச்சை! கசிந்த ஆடியோவால் பாமக கோட்டையில் பரபரப்பு! அம்பலமான ரகசிய டீல்!!!

மாதாந்திர கணக்கீடு கோரிக்கை

தற்போது தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும் நடைமுறை உள்ளது. இதையடுத்து, இலவச மின்சாரம் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமெனில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதற்கிடையில், அரசாணையின் விளக்கம் குறித்து அரசின் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் மேலும் அரசியல் விவாதத்தை தூண்டும் என கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: மெஜாரிட்டி இருக்கா? அது வெறும் டிராமா.. பின்னணியில் யாரு..? ஆளுநரின் முடிவுக்கு எதிராக.... விஜய்க்கு ஆதரவாக தமிழகத்தில் திரலும் புதிய புரட்சி.!!!