"எளியவருக்கு அதிகாரம், அதிலென்ன ஆத்திரம்" - திமுக ஆ. ராசாவுக்கு விசிக தடாலடி பதில்.!



VCK Balaji Replies DMK A Raja Comment on TVK Alliance Government 

தமிழக அரசியலில் வார்தைப்போர் தொடங்கி இருக்கிறது. இனி வரும் ஓராண்டுக்கு குற்றச்சாட்டுகள் அதிகளவில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி-அதிகாரத்தில் பங்கு:

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்த தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்காத காரணத்தால், கூட்டணி ஆட்சி அமைந்து இருக்கிறது. இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், விசிக உட்பட கூட்டணிக்கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில், இன்று விசிகவின் வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

இதையும் படிங்க: 'ஆட்சி பங்கு எங்கள் உரிமை' - காங்கிரஸ் போர்க்கொடி.. திமுக தலைமைக்கு தொடரும் சிக்கல்.! 

TN politics

வாக்கு நிறைவேற்றப்பட்டது:

முன்னதாக திமுக கூட்டணியில் இடமபெற்ற காங்கிரஸ், விசிக உட்பட முக்கிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப்பின் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி தவெகவுடன் தங்களை இணைத்துக்கொண்டது. தவெக தேர்தல் பிரச்சாரத்தின்போதே தங்களுடன் கூட்டணி வரும் கட்சிக்கு ஆட்சி-அதிகாரத்தில் பங்கு என்பதை முன்வைத்து இருந்தது. தற்போது அதனையும் நிறைவேற்றி இருக்கிறது. 

TN politics

தொடரும் விமர்சனம்:

இந்த விஷயம் திமுகவுக்கு தேர்தல் தோல்வியுடன் கூட்டணி பிரிவும் மிகப்பெரிய இடியை இறக்கி இருக்கிறது. இதனை மேல்மட்ட தலைமை கண்டிக்கவில்லை என்றாலும், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக மீதும், அவர்களுடன் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் மீதும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் திமுகவின் ஆ. ராசா விசிக உட்பட முந்தைய திமுக கூட்டணி கட்சிகள் குறித்து பேசி இருந்தார். 

இந்நிலையில், இந்த விஷயத்துக்கு விசிக பொருளாளர் பாலாஜி பதிலளித்து இருக்கிறார். அவரின் இதுகுறித்த ட்விட்டர் பதிவில், "

அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம் 
ஆற்றாமையால் அள்ளிவீசும் 
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது 
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து 
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா 
அனலில் தகித்து போவீர்!" என தெரிவித்துள்ளார். இது நேரடியாக திமுகவுக்கு தந்த பதிலடியாக கவனிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: #JustIN: விஜய் குறித்த கேள்வி.. திரிஷா செய்த செயல்.!